மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் அப்பவும், பிறகு அவரது மகனும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான குமாரின் மகன் 22 வயதான கார்த்திக், அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

father and son has raped the mentally ill woman

அந்த வீட்டில் 32 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருந்துள்ளார். அடிக்கடி அங்கு சென்று வந்த நிலையில், அந்த பெண்ணை கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்படவே, அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

father and son has raped the mentally ill woman

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்துள்ளார். அதன்படி, அங்குள்ள காவல்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியல், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கார்த்திக் என்பதை கண்டுபிடித்து அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

father and son has raped the mentally ill woman

இதனையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கைது செய்யப்பட்ட கார்த்திக் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கார்த்திக்கின் தந்தை குமார் தான் முதன் முதலில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து, குமாரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தந்தை - மகன் இருவரும் மாறி மாறி பாலியல் பாலத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.