பருவமழையை எதிர்கொள்ள தி.மு.க. அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 7 ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடானது. 

தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய அதிகனமழையால், சென்னையில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடின. 

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  2015-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் 207 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.

e1

மேலும், சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன. அதேபோல, வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிட்டு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.

மேலும்,மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறும் முதல்வர், அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதையடுத்து கே.கே.நகரிலும் மழை பாதிப்புகளை அவர் கேட்டறிந்தார்.

e21

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர். நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் கொடுத்தும் தி.மு.க. அரசு மெத்தனமாக செயல்பட்டதாலேயே, சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கொரோனா காலத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அம்மா உணவகம் மூலம், இலவசமாக உணவு வழங்கியது போல், இப்போது மழைவெள்ளத்தின்போதும் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று, பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, சென்னையின் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.#களத்தில்_எடப்பாடியார் 1/2 pic.twitter.com/NrLmIaRwaE

— AIADMK (@AIADMKOfficial) November 8, 2021