தமிழகம் முழுவதும் நடைபெறும் திமுகவின் முதல்கட்ட சட்டமன்ற தேர்தலுக்கு, 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் குறித்த விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திராவிட முன்னேற்ற கழகம் தலைமை வெளியிட்ட அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் மும்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழகம் மீட்போம் எனும் தலைப்பிலான 2021-சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும். முதல் கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.கழக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் தேதி,இடம்:

நவம்பர் 1-ம் தேதி  ஈரோடு,
நவம்பர் 2-ம் தேதி  புதுக்கோட்டை
நவம்பர் 3-ம் தேதி  விருதுநகர்.
நவம்பர் 5-ம் தேதி  தூத்துக்குடி.
நவம்பர் 7-ம் தேதி  வேலூர்.
நவம்பர் 8-ம் தேதி  நீலகரி.
நவம்பர் 9-ம் தேதி  மதுரை.
நவம்பர் 10-ம் தேதி விழுப்புரம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் களப்பணி என தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுக, ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதே போல அதிமுகவும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் எந்த கட்சி ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.