’நான் கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்க வேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது’ என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்.


தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்ற தலைப்பில் இன்று நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையவழி கருத்தரங்கில் கமல்ஹாசன் பேசினார்.


“விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டுமே செய்யும் விஷயம் அல்ல. தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்பது அவசியமான ஒன்று. கட்சியில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்கவேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது. ” என்று கூறியுள்ளார்.