காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

Dinesh arrested for cheating women after Nagercoil kasi

இதனையடுத்து, சி.பி.சி. ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து காசியை விசாரித்து வருகின்றனர். அதன்படி, காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது. 

Dinesh arrested for cheating women after Nagercoil kasi

குறிப்பாக, காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததும், பல பெண்களின் ஆபாசப் படம் அவனிடம் இருப்பதாகவும் தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் காசியின் நண்பனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான தினேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில், “காசியின் வக்கிர புத்தி தெரிந்ததும் பல பெண்கள் அவரின் தொடர்பைத் துண்டித்து வந்துள்ளனர். இதனையடுத்து, தன்னிடமிருந்து விலகிச் செல்லும் பெண்களின் செல்போன் நம்பரை காசி, தன்னுடைய நண்பர் தினேசுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 

பெண்களின் செல்போன் நம்பர் வந்ததும், அந்த பெண்களை தினேஷ் தொடர்பு கொண்டு பேசி மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதன்படி,  “காசியிடம் பேசவில்லை என்றால், உங்கள் சம்மந்தப்பட்ட ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக” மிரட்டி வந்திருக்கிறார். 

Dinesh arrested for cheating women after Nagercoil kasi

இந்த மிரட்டலுக்குப் பயந்து சில பெண்கள், காசியின் தொடர்பைத் துண்டிக்க முடியாமல், கடும் இன்னலுக்கு ஆளாகித் தவித்து வந்துள்ளனர். அத்துடன், காசியுடன் பழகி வந்த பல பெண்களை மிரட்டி, தினேஷ் தனியாக பாலியல் பலாத்காரம் செய்து, அவனும் தன் பங்கிற்கு ஆபாசப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, காசியைப் போலவே மிரட்டி வந்ததும்” விசாரணையில் தெரியவந்தது. 

குறிப்பாக, “காசி தொடர்பாகப் புகார் அளிக்கத் துணிந்த ஒரு இளம் பெண்ணை, காசி மற்றும் அவனது கூட்டாளிகளான தினேஷ், அவனது நண்பன் என 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி, அந்த பெண்ணின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்ததும்” தெரியவந்துள்ளது.

அதேபோல், காசியின் கூட்டாளிகள் இன்னும் சிலர் பெண்களை மிரட்டி உள்ளதும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த கூட்டாளிகளும்  விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், காசி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.