காதலியை பார்க்கச் சென்ற காதலனை, காதலியின் தந்தை கத்தியால் குத்தி விட்டு, தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகில் உள்ள பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார், அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறார்.

அதே நேரத்தில், வினோத் குமார் தன்னுடன் கல்லூரியில் படித்த அங்குள்ள பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மோனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து காதலித்து வந்து உள்ளார். இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால், காதலர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படியா சூழ்நிலையில், இந்த காதல் விசயம் இளம் பெண்ணின் வீட்டில் தெரிந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, அந்த இளம் பெண் தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க என்னமோ செய்து பார்த்தார். ஆனாலும், அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி அன்று, காதலன் வினோத் குமார், தனது காதலியான மோனிகாவை பார்ப்பதற்காக, பிள்ளையார் நத்தம் சென்றிருக்கிறார். 

இந்த விசயம் எப்படியோ இளம் பெண்ணான மோனிகாவின் தந்தை செல்வராஜ்க்கு தெரிய வந்தது. இதனால், கடும் ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்து ஒரு கத்தியைத் தனது இடுப்பில் மறைத்து எடுத்துச் சென்று உள்ளார்.

அதன் படி, காதலன் வினோத் குமார் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து காத்திருந்த நிலையில், அங்கு வந்த செல்வராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத் குமாரின் வயிற்றில் குத்தி விட்டு, அங்கிருந்து த‌ப்பி ஓடியுள்ளார்.

இதில், கத்தியால் குத்தப்பட்ட வினோத் குமார், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து கீழே விழுந்தார்.

இதனைப் பார்த்த அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்த, படு காயமடைந்த வினோத் குமாரை மீட்டு, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்குத் தீவரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை முயற்சி என்று வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இளம் பெண்ணின் தந்தையான செல்வராஜை சின்னாளப்பட்டி காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.