முன்னதாக ஸ்டாலின் மகன் கருணாநிதி என்றும், நீட் தேர்வினை கொண்டு வந்தது மன்மோகன் சிங் ஆட்சி என்பதற்கு பதிலாக முலாயன் சிங் ஆட்சி என்றும், அதிமுக பொங்கலுக்கு கொடுக்கும் 2500 ரூபாய், மீண்டும் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்றும் பேசி இருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது, சொந்த கட்சியை பற்றியே உளறி உள்ளார். 


இந்நிலையில்,  அதிமுக சார்ப்பில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ,  ’தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி எவ்வளவு கேவலமானது என்று நீங்களே பாருங்கள். எவ்வளவு அசிங்கமா போகிறதென்பதை சிந்தியுங்கள்' என்றார். இதை கேட்டதும் மேடையில் இருந்த மற்ற அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைந்தனர்.


திமுக என்று குறிப்பிடாமல், அமைச்சர் சீனிவாசன் இப்படி பேசியது ஆட்சி செய்யும் சொந்த கட்சியை சொல்வதுப்போல் பொருளானது. அமைச்சர் இவ்வாறு உளறியதை, சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள் .