வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று பிற்பகல் 12 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த தாழ்வுப் பகுதி வேகமாக வலுப்பெற்று வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலைதான் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த தாழ்வுப் பகுதி, விரைவில் வடதமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின் கரையை கடக்கும்.

21

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய பின், நாளை மாலை கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இது புயலாக மாற வாய்ப்புகள் இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான போதிய அவகாசம் இல்லை.

எனவே புயலாக மாறாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இது கரையை கடக்கும். கடலூர் அருகே கரையை கடப்பதால் கடலூர் தொடங்கி, சென்னை வரை உள்ள பெல்ட் முழுவதும் தீவிர மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மையம் வடமேற்கு நோக்கி நகர்வதால் இன்றில் இருந்து டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும்.

மாறாக கடலூர் முதல் சென்னை வரை வட தமிழகம் முழுக்க தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். சென்னையில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மாலை வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஏற்கனவே ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

23

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால் வங்கக்கடல் பகுதி முழுக்க கொந்தளிப்பாக காணப்படும். காற்றின் வேகம் மணிக்கு சுமார் 60 கி.மீ.க்கும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. 

அதே போன்று வங்கக்கடலில் நவம்பர் 13-ல் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், தெற்கு அந்தமான் கரையோரப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.