பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது இரு மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

bipin rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

தொடர்ந்து  அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து வீரர்களின் உடல்கள் தனி தனி ஆம்புலன்சில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் ரணுவ விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ராணுவ வீரர்கள் கணத்த முகத்துடன் ராணுவ மரியாதையுடன் அவர்களின் உடல்களை டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுச்சென்றனர். முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர் .

பின்னர் தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது இரு மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது. தொடர்ந்து முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் அஜய் பட் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதனையயடுத்து விபின் ராவத் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறுதல் தெரிவித்தார்.