போலீஸை முட்டிபோட வைத்து, கத்தியால் குத்தி உயிர் பயம் காட்டிய கஞ்சா கும்பலின் அரக்கத் தனமான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தான், கஞ்சா கும்பல் ஒன்று போலீசாருக்கு உயிர் பயம் காட்டிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 Cuddalore drug mafia gang assaults police

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 15 வது என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் தாஸ், காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, நெய்வேலி சுரங்கத்தில் காப்பர் திருடிய மந்தாரக்குப்பத்தை சேர்ந்த கஞ்சா மணியை, சி.ஐ.எஸ்.எப் போலீஸ் தாஸ், விரட்டிச் சென்று பிடிக்க முயல்கிறார். 

அந்த இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருப்பதால், சிறிது தூரம் ஓடிய அந்த ரவுடி, திடீரென்று சினிமா ஸ்டைலில் திரும்பி நின்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அதே சினமா பாணியில் அந்த போலீசாரை கடுமையாக மிரட்டுகிறான்.

பின்னர், வாட்ட சாட்டமாக இருந்த அந்த போலீசாரை, குள்ளமாக இருந்த அந்த ரவுடி, முட்டிப்போட வைத்து கத்தியால் குத்துகிறான். இதில், உயிர் பயத்தில், தன்னை விட்டு விடும்படி, அந்த ரவுடியிடம் போலீசார் கெஞ்சுகிறார். 

இதனை, அங்கிருந்த மற்றொரு போலீசார் தனது செல்போனில் படம் பிடிக்கிறார். இதனையடுத்து, படம் பிடிக்கும் போலீசாரையும் அந்த ரவுடி தாக்க முற்படுகிறார். அப்போது, அந்த பகுதிக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் காவலர் ஜான் தன்னுடைய நண்பர் என்று கூறி, அந்த போலீசார் தப்பிக்க முயல்கிறார். உடனே, அந்த ரவுடி.. தன் அருகிலிருந்த மற்றொரு ரவிடியுடம், “ஜான் சாருக்கு போன் பண்றா” என்று கெத்தாக கூறுகிறார்.

Cuddalore drug mafia gang assaults police

இதனையடுத்து, அங்கிருந்து தப்பித்து வந்த 2 சி.ஐ.எஸ்.எப். வீரர்களும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், குற்றவாளிகளைக் கைது செய்யாமல், அங்குள்ள காவல் நிலைய பெண் ஆய்வாளர் ரவுடிகளிடம் இயல்பாகப் பேசிவிட்டுச் செல்கிறார். இந்த காட்சிகளும், அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதனால், நெய்வேலில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
துணிச்சலாகப் பட்டப்பகலில் மத்திய போலீசாரையே கொலை செய்யும் அளவிற்கு, கையில் கத்தியுடன் கஞ்சா கும்பல் ஒன்று வெறித்தனமாக தாக்கும் நிகழ்வு தற்போது, வீடியோவாக வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.