அமெரிக்காவில் குவியும் சடலங்களால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அசந்து தூங்கியவர் உயிருடன் தகனம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே, கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிவருது அமெரிக்காவிலேயே அதிகமாக நிகழ்கிறது. இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நியூயார்க் மாகாணம் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. 

coronavirus us death burial grounds

இதனால், அமெரிக்காவில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இறுதி சடங்கு கூடத்தில் குவியும் சடலங்களால் அங்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு குழப்பத்தால், அசந்து தூங்கியவர் ஒருவர் உயிருடன் தகனம் செய்யப்பட்டுள்ளார்.  

அமெரிக்காவிலேயே நியூயார்க்கில் கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறுதி சடங்கு கூடத்தில் சடலங்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் குவிந்து வருகிறது. 

இதனால், நியூயார்க் இறுதி சடங்கு கூடம் ஒன்றில் வேலைபார்க்கும் 48 வயதான மைக்கேல் ஜோன்ஸ், 16 மணி நேரம் தொடர்ச்சியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இதனால், கடும் அசதி ஏற்பட்டு, அங்குள்ள ஒரு ஸ்டெரக்சரில் அசந்து தூங்கி உள்ளார். 

அப்போது, அவருடன் வேலைபார்த்த சக ஊழியர் ஒருவர், இறந்தவரின் சடலம் என்று தவறாக நினைத்துக்கொண்டு, அவரையும் சேர்த்து உயிருடன் தகனம் செய்துள்ளார்.

அந்த மின்சார அறையில், மைக்கேல் ஜோன்ஸின் உடல் தகனம் செய்யப்பட்டபோது, அதிகம் வெப்பம் காரணமாக, அவர் அலறி துடித்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் வரும் திசையைக் கண்டுபிடிப்பதற்குள், அடுத்த 15 நொடிகளில் அவர் பரிதாபமாக சாம்பலானார். சுமார் 1400 முதல் 1800 ஃபெரான்ஹிட் வெப்பத்தின் காரணமாக, அவர் 15 நொடிகளில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க போலீசார், “எரியூட்ட உடல்களை எடுத்த வந்தவர், புதிதாக வேலையில் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றியவர் உயிருடன் தகனம் செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.