“தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் 100 க்கும் கீழ் குறைந்து, 17 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை” என்கிற நிலை உருவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2 அலையானது, தமிழகத்தில் சற்றே ஓய்ந்திருக்கிறது என்று சொல்லாம். அந்த அளவுக்கு தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில், தற்போதைய தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைந்துகொண்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், “தமிழகத்தில் நேற்றைய தினம் மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக”  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக” குறிப்பிட்டு உள்ளது.

இதனால், “தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25,31,118 ஆக உயர்ந்துள்ளதாக” சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது,

- தமிழகத்தில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,31,118 ஆக அதிகரித்து உள்ளது.

- இதில், அதிகபட்சமாகக் கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் 152 பேரும், சேலத்தில் 168 பேரும், திருப்பூரில் 138 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

- சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 144 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால், சென்னையில் மொத்தம் 535902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

- தமிழகத்தில் குறைந்தபட்சமாகத் தென்காசியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 124 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 300 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

- தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் நேற்று உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,652 ஆக உயர்ந்துள்ளது. இதில், தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 28 பேரும் உயிரிழந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- அதில், அதிகபட்சமாகச் சென்னையில் 7 பேரும், கோவை, கடலூர், திருவள்ளூரில் தலா 4 பேரும் உள்பட 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

- இப்படி உயிரிழந்தவர்களில் 6 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்த வகையில், தமிழகத்தில் இது வரை 33 ஆயிரத்து 652 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,986 பேர் தற்போது குணமடைந்து உள்ளனர். இதன் மூலமாக மொத்தம் 24,68,236 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

- குறிப்பாக, தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் 100 க்கும் கீழ் குறைந்துள்ளது. 

- 17 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

- தமிழகத்தில் இது வரை 3,52,68,724 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 1,48,778 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

- தமிழகத்தில் 29,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- நேற்று மட்டும் 1,360 ஆண்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,79,004 பேர் ஆண்கள் ஆவர்.

- தமிழகத்தில் நேற்று மட்டும் 952 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,52,076 பேர் பெண்கள் ஆவர்.

- தமிழகத்தில் இது வரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய தினம், திருநங்கைகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

- இந்தியாவிலேயே அதிக பட்சமாகத் தமிழகத்தில் மொத்தம் 274 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அரசு மையங்கள் 69 பேரும், தனியார் மையங்கள் 205 பேரும் பரிசோதனை செய்துள்ளனர்.

- தமிழகத்தில் நேற்று மட்டும் 39 ஆயிரத்து 546 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 16 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 271 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 72 ஆயிரத்து 833 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது.