கொரோனா அறிகுறிகள் எது? எப்படி இருக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

கொரோனா அச்சம், அனைவருக்கும் வந்துவிட்டது. நம்மை அறியாமல் நாம் ஒரு முறை தும்மும் போதும், இருமும் போதும், ஒரு வேலை இது கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. அது இயல்பு தான்.  

அப்படி, கொரோனா வைரஸ் தாக்கம் என்றால், நம் உடலில் எந்த வகையான மாற்றங்கள் நிகழும், ஏற்படுத்தும் என்பது பற்றிய அறிகுறிகளை தற்போது பார்க்கலாம்... 

Corona Symptoms: What and how they would be?

- முதல் 3 நாட்கள்.. காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியாகக் காணப்படுதல்..

- 4 வது நாள் அன்று.. பசியின்மை, உடல் வெப்பம் அதிகமாகக் காணப்படுதல், கரகரப்பான குரல் போன்ற அறிகுறிகள் தெரியும்..

- 5 வது நாள் அன்று.. உடல் சோர்வு, தசை வலி, வறட்டு இருமல் என்று அறிகுறிகள் தென்படும்..

- 6 வது நாள் அன்று.. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுதல் மற்றும் மூச்சுத் திணறல், லேசான காய்ச்சல் இருப்பது...

- 7 வது நாள் அன்று.. உடல் வலி அதிகரிக்கும்.  இருமல், சளி அதிகரிக்கும். இறுதியாகக் காய்ச்சல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்..

- 8 வது நாள் அன்று.. அதீத காய்ச்சல் காணப்படும். அதீத இருமல் காணப்படும். மூச்சு விடுவதில் ரொம்பவும் சிரமம் ஏற்படும்..

Corona Symptoms: What and how they would be?

இப்படியாக, தொடர்ந்து 8 நாட்கள் உங்களுக்கு இருந்தால், சந்தேகமே வேண்டாம்.. உங்களை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது என்பதை முடிவு செய்து, அருகில் உள்ள மருத்துவரைச் சென்று பார்ப்பது உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது.

ஆக, விழிப்புடன் இருப்போம்.. கொரோனாவை விரட்டியடிப்போம்..!