தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ளத் தேவையான போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

corona

தென் ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவரும் வீட்டுத் தனிமையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் 12 வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்கின்ற நிலையில், இந்தத் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்ட காலை முதல் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

செய்தியாளருக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:  தமிழக முதல்வர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஓர் இயக்கமாக நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது ஒரு இயக்கமாக தற்பொழுது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 78 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் இன்று 12வது தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஏறத்தாழ 50,000 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை 2 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கின்ற இலக்குடன் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ளத் தேவையான போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் நிறுவனம் ஐக்கிய பேரரசு சார்பில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவ சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறினார். 3-வது அலை பரவினாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் போதிய மருத்து கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.