இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், உயிரிழப்பு 229 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தொலைக்காட்சி வாயிலாக ஆராதணை மற்றும் சிலுவைப்பாதையை கண்டுகழித்தனர்.

Corona affected people increases 6825 in India

டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது.

அந்தமானில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 10 பேரும் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக அந்தமான் தலைமைச் செயலாளர் சேத்தன் சாங்கி தெரிவித்துள்ளார். மேலும், அந்த 10 பேரும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் தொடர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1380 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பு 98 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலித்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமிக்கு, மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து முடிவு எடுக்க நாளை மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Corona affected people increases 6825 in India

இதனையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் டெல்லி 3 வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 12 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் கொரோனாவினால் இன்று மேலும் இருவர் உயிரிழந்ததால், அந்த மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 463 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலம் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது கொரோனா நோயாளி, இன்று காலை உயிரிழந்தார். இதனால், அசாமில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

பீகாரில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திராவில் 365 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை, அந்த மாநிலத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் குணமடைந்துள்ளனர். 

குறிப்பாக, தெலங்கானாவைச் சேர்ந்த வீரத்தாய் ஒருவர், ஊரடங்கு உத்தரவால் ஐதராபாத்தில் சிக்கித் தவித்த தனது மகனை, சுமார் 1400 கிலோ மீட்டர் ஸ்கூட்டியில் சென்று, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதனிடையே, கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு 16,698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.