“என் மனைவியின் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டும் போலீசிடமிருந்து என் மனைவியை காப்பாத்துங்க சார்” என்று, பாதிக்கப்பட்ட கணவன் கதறும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மண்ணாடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், முத்தியால் பேட்டை காவல் நிலையம் எதிரே சொந்தமாக கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். 

இதனால், இவரது மனைவி ரூபாவதி, அடிக்கடி கூரியர் நிறுவனத்திற்குச் சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இப்படியாக வந்து செல்லும்போது, முத்தியால் பேட்டை காவல் நிலைய ஓட்டுநர் பெஞ்சமின் பிராங்கினுடன், ரூபாவதிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. அவர்கள் இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்து உள்ளனர். இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர்.

இப்படியாக, அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது, அதனை முத்தியால் பேட்டை காவல் நிலைய ஓட்டுநர் பெஞ்சமின் பிராங்கிளின் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும், இந்த கள்ளக் காதல் பழக்கத்தில், காதலி ரூபாவதியிடம் இருந்து முத்தியால் பேட்டை காவல் நிலைய ஓட்டுநர் பெஞ்சமின் பிராங்கிளின், 3 லட்சம் ரூபாய் பணம், 3 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். 

இந்த நிலையில் தான், ரூபாவதி திடீரென அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கணவர் ஜெயபிரகாஷ், மனைவி ரூபாவதியை காப்பாற்றி “என்ன நடந்தது?” என்று, விசாரித்து உள்ளார்.

அப்போது ரூபாவதி, “கடந்த ஒரு வருடமாக பெஞ்சமினுடனான கள்ளக் காதல் உறவு” பற்றி கூறி அழுதுள்ளார். 

மேலும், “நாங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை, தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட பெஞ்சமின், அதனை 'சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக' என்னைத் தொடர்ந்து மிரட்டி, பெஞ்சமின் என்னை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து வருவதாகவும்” ரூபாவதி அழுதுகொண்டே கூறி உள்ளார்.

குறிப்பாக, “இன்னும் 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும், தரவில்லையானால் இந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகவும் பெஞ்சமின் மிரட்டுகிறார் என்றும், இதனால் அவருடனான திருமணத்தை மீறிய உறவைக் கைவிட முடியவில்லை” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த கணவர் ஜெயபிரகாஷ், ரூபாவதியின் செல்போனை ஆராய்ந்து, அதில் அழிக்கப்பட்ட பல ஆபாச வீடியோக்களை மீட்டெடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

ஆனால், பெஞ்சமின் போலீஸ் என்பதால், அவர் மீதான புகாரை அங்குள்ள சக போலீசார் மறுத்து விட்டனர் என்றும், கணவர் ஜெயபிரகாஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனையடுத்து, “காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கொலை செய்து விடுவதாக பெஞ்சமின் மிரட்டுகிறார்” என்றும், பாதிக்கப்பட்ட ரூபாவதியின் கணவர் ஜெயபிரகாஷ், குற்றம்சாட்டி உள்ளார்.

இதனையடுத்து, “என்னிடம் பணம் கேட்டு மிரட்டும் காவலர் பெஞ்சமின் மீது நடவடிக்கை எடுக்கக்கோ”  காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயபிரகாஷ் தற்போது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “காவலர் பெஞ்சமினிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும், பெஞ்சமின் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எனது மனைவியிடமிருந்து அவர் பெற்ற 3 லட்சம் ரூபாய் பணம், 3 சவரன் தங்க நகைகளை மீட்டுத்தர வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட ரூபாவதியின் கணவர் ஜெயபிரகாஷ், கோரிக்கை விடுத்துள்ளார்.