கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு, துணைப் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும்,
பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கல்லூரி விடுமுறை காலம் என்பதால், ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்திருக்கிறார்.

அப்போது, சட்டக் கல்லூரி துணைப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி என்பவர், ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்திருக்கிறார்.

இந்த நேரத்தில், ஆன்லைனில் பாடம் எடுக்கும் போது, குறிப்பிட்ட மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம், அவருடைய செல்போன் நம்பரை வாங்கி உள்ளார். அந்த மாணவியும், துணைப் பேராசிரியர் தானே நம்பர் கேட்கிறார் என்கிற நம்பிக்கையில் தனது செல்போன் நம்பரை கொடுத்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த துணைப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி, அடிக்கடி அந்த மாணவிக்கு போன் செய்து பேசி வந்திருக்கிறார். அத்துடன், அந்த மாணவிக்கு அடிக்கடி சாட்டிங் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படியான நிலையில், அந்த மாணவி ஊருக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார். இதனைத் தெரிந்துகொண்ட உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி, “நானே எனது காரில் உன்னை கொண்டுச் விடுவதாக” கூறி, அந்த மாணவியை அழைத்துச் சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த மாணவியை அழைத்துக்கொண்டு செல்லும்போது, நடு வழியில் குளிர்பானத்தில் அந்த மாணவிக்கு மயக்க மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனை குடுத்த அந்த மாணவி சற்று நேரத்தில் மயங்கி விடவே, அதன் தொடர்ச்சியாக, அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறல் அவர் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. 

அத்துடன், அந்த மாணவியிடம் பாலியல் அத்து மீறிலில் ஈடுபட்டதை, அந்த ஆசிரியர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டு, அந்த மாணவியை அடிக்கடி பாலியல் உறவுக்கு அழைத்து வற்புறுத்தி வந்தார் என்றும், கூறப்படுகிறது. 

இப்படியாக, அந்த கல்லூரி துணை பேராசியரின் மிரட்டல் எல்லை மீறி போகவே, ஒரு கட்டத்தில் பயந்துபோன அந்த மாணவி, தனக்கு நேரும் இந்த பாலியல் தொல்லைகள் குறித்து, நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அன்புவிடம் புகார் மனு அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட உதவி பேராசிரியரை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்று உள்ளனர். ஆனால், அவர் வீட்டில் இருந்து தலைமறைவாகி உள்ளார். இதனால், போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதனிடையே, மாணவ - மாணவிகளுக்கு முன்னுதாரனமாக திகழ வேண்டிய பேராசிரியர் ஒருவரே, மாணவியிடம் கீழ்த்தரமாக பாலியல் அத்து மீறலில் நடந்து கொண்ட சம்பவம் சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.