வெள்ள பாதிப்புகளை 3-வது நாளாக ஆய்வு செய்து நிவாரண உதவிகளை முதலமைச்சர்  வழங்கினார்.

stalin

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீரை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்மோட்டர்களை கொண்டு அகற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர், இன்று மூன்றாவது நாளாக சென்னை கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மழை வெள்ளத்தை கண்காணிக்க அதிகாரிகளை முதல்வர் நியமனம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார். மேலும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். நீர் நிலைகளை ஆய்வு செய்து, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தல் வழங்குகிறார்.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்தார். மருத்துவ முகாம்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 
தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலவச மருத்து முகாம்களையும் இன்று முதலமைச்சர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார். வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.