மழை கால இலவச சிறப்பு மருத்துவ முகாமை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

stalinதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது . இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில்  மழைக்கால இலவச சிறப்பு முகாமை முதல்வர் தொடங்கிவைத்தார். பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்கியதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். 200 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகள் சார்பாக 200 முகாம்களும் சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 200 முகாம்கள் என மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகிறது.