சென்னையில், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த காதலன், அந்த உல்லாச காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, தன் நண்பனுடன் சேர்ந்து மிரட்டிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செம்பாக்கத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் அமுதா ( பெய் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 16 வயது இருக்கும் போது, சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். 

அப்போது, ஃபேஸ்புக் மூலமாக சென்னை எருக்கஞ்சேரி எஸ்.எம். நகர், ஓ.எஸ்.சி. தெருவைச் சேர்ந்த 25 வயதான சுபீன் பாபு என்ற இளைஞர், அந்த சிறுமிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி உள்ளார். இதன் தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் இவர்கள் இருவரில் யார் எந்த பதிவு போட்டாலும், இருவரும் மாறி மாறி தங்களது கருத்துக்களை முதல் கருத்துக்களாகப் பதிவு செய்து வந்தனர். 

இதன் காரணமாக, அவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இருவரும் தங்களது செல்போன் எண்ணைப் பகிர்ந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, செல்போனில் தங்களது காதலை இருவரும் வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், அந்த சிறுமியை நேரில் பார்க்க வேண்டும் என்று, சுபீன் பாபு அடம் பிடித்துள்ளார். இதனால், அந்த சிறுமியும், சுபீன் பாபுவை பார்க்க ஒரு பொதுவான இடத்திற்க வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உள்ளனர். குறிப்பாக, அந்த சிறுமிக்கு 16 வயது இருக்கும் போது, அறிமுகமான அடுத்த நில நாட்களிலேயே தன் காதல் வலையில் வீழ்த்திய சுபீன் பாபு, அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இப்படியாக, அந்த சிறுமி உடனான உல்லாச வாழ்க்கை 4 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து உள்ளது.

அந்த சிறுமிக்கு 16 வயது இருக்கும் போது, சிறுமியுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்ட சுபீன் பாபு, அந்த சிறுமிக்கு தற்போது 20 வயது ஆகும் வரை, தொடர்ந்து உல்லாசம் இன்பம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தங்களது காதலை அடுத்தகட்டமான திருமணப் பந்தத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறுமி, சுபீன் பாபுவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி கூறி உள்ளார். ஆனால், அவர் சரிவரப் பதில் அளிக்காமல் அந்த பெண்ணை கழற்றிவிடப் பார்த்துள்ளார்.அந்த பெண், தொடர்ந்து சுபீன் பாபுவை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், சிறுமியுடன் தான் தனிமையில் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்த வீடியோ தன் செல்போனில் இருந்து எடுத்து, தன் நண்பன் சுஜின் வர்கீஸிடம் காட்டி உள்ளார். அதனைப் பார்த்து ரசித்த அவன் நண்பன் சுஜின் வர்கீஸ், அந்த பெண்ணை ஏமாற்றி விடலாம் என்று யோசனை கூறியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தவே, சுபீன் பாபு தனது நண்பன் வர்கீஸூடன் சேர்ந்து, தன்னிடம் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்த வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்த அந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனையடுத்து, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுபின் பாபு மற்றும் அவரது நண்பன் சுஜின் வர்கீஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.