பிரதமர் நநேந்திர மோடி சென்னை வந்தபோது, அவர் தலைமையில் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.


இந்த மெட்ரோ ரயில் நிலையப் பணிகளில் 13  திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விநியோகம், பயணிகள் பரிசோதனை, ஒழுங்கமைப்பு போன்ற பணிகளுக்கு CMRL வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.


பெரும்பாலும்,  சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், புறக்கணிப்புகளை மட்டுமே சந்தித்து வருபவர்களுக்கும, மெட்ரோ நிர்வாகத்தின் இந்த செயல் மகிழ்ச்சி அளித்துள்ளதாக, பணியமர்த்தப்பட்ட திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள் கூறுகிறார்கள். மேலும் சென்னை மெட்ரோவின் இந்த செயல் பல்வேறு தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.