நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் விரக்தி அடைந்த இளைஞன் ஒருவன், இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை நண்பர்களுக்குப் பகிர்ந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த முகமது அசேன் என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கடந்த 13 ஆம் தேதி அன்று, திருமணம் நிச்சியம் நடந்திருக்கிறது. 

இரு வீட்டார் முறைப்படி நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தம் நிகழ்வில், இரு வீட்டாரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆனால், திருமண நிச்சயம் முடிந்த அடுத்த சில நாட்களில், மாப்பிள்ளையின் நடத்தை சரியில்லை என்று கூறி, நடந்த திருமண நிச்சயத்தைப் பெண் வீட்டார் ரத்து செய்து விட்டனர்.

அத்துடன், திருமண நிச்சயத்தைப் பெண் வீட்டார் ரத்து செய்த கையோடு, அந்த பெண்ணிற்கு வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்து, திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

இந்த தகவல், மாப்பிள்ளை மற்றும் அவரின் வீட்டாருக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை முகமது அசேன், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது, அந்த பெண்ணுடன் வீடியொ காலில் மிகவும் ஆபாசமாகப் பேசியதை, தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த முகமது அசேன், அதனை தன் சக நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளான்.

இந்த வீடியோ விசயம், பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமது அசேனை கைது செய்து, விசாணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவிகளிடம், ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர், அதிகமான மூடநம்பிக்கை ஒழிப்புக்கொள்கையை தீவிரமாகக் கொண்டவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.