சென்னையில் பெற்ற மகள்களுக்கு முன்பு நிர்வாணமாக ஆடை மாற்றிக்கொண்டு வந்த தந்தை, அதில் ஒரு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண், தன் கணவர் 45 வயதான செந்தில் குமார், மற்றும் தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

அமுதாவிற்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பு செந்தில் குமாருடன் திருமணம் நடை பெற்ற நிலையில், இவர்களுக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அதில், ஒரு பெண் குழந்தைக்கு தற்போது 16 வயது நடக்கிறது. மற்றொரு பெண் குழந்தைக்கு 8 வயது நடக்கிறது. இவர்கள் 2 பேரும், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இதனிடையே தந்தை செந்தில் குமார், துளியும் வெட்கம் இன்றி, தனது இரு பெண் குழந்தைகள் முன்பும் பல மாதங்களாகவே நிர்வாணமாக நின்று, ஆடைகளை மாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக இரு பிள்ளைகளும், அவரது தயாரிடம் புகராக சொன்ன நிலையில், செந்தில் குமாரை அவரது மனைவி கடுமையாகக் கண்டித்து உள்ளார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்து உள்ளது.

இதன் தெடார்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனைவி அமுதாவும், மூத்த மகளும் ஒன்றாகக் கடைக்கு சென்றிருந்த நிலையில், விட்டில் 8 வயதான சின்ன மகள் மட்டும் தனியாக டி.வி. பார்த்துக்கொண்டு இருந்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, தந்தை செந்தில் குமார், தான் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பெற்ற மகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து முத்தமிட்டார் என்றும், குற்றம் சாட்டப்படுகிறது.

இதனையடுத்து, தாய் அமுதா வீடு திரும்பிய நிலையில், 8 வயது மகள் அழுதுகொண்டே, தந்தையின் பாலியல் சித்திரவதை பற்றி தயாரிடம் புகார் கூறியதாகத் தெரிகிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அமுதா, தன் கணவனிடம் சண்டைக்கு சென்றுள்ளார். அப்போது, பதிலுக்கு அவரும் சண்டை போடவே, கணவன் - மனைவி இடையே பெரும் பிரச்சனை எழுந்து உள்ளது.

இதனையடுத்து, குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி கணவன் செந்தில் குமார் மீது மனைவியே சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக, செந்தில் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தந்தையே பெற்ற 2 பெண் பிள்ளைகள் முன்பு நிர்வாணமாக ஆடைகளை மாற்றி வந்த நிலையில், அதில் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.