நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வரத்து குறைந்து கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால், தக்காளி, கேரட், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. 

குறிப்பாக, சென்னையில் கனமழை பெய்வதால் காய்கறிகளுக்கான வரத்து குறைந்துள்ளது. இதனால் தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியுள்ளது. காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 

k1

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 35 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (நவம்பர் 8) ஒரு கிலோ தக்காளி விலை 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் பல்வேறு இடங்களில் 90 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை 40 ரூபாயாக உள்ளது. அதேபோல, அவரைக்காய் விலை 50 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ கேரட் 85 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 40 ரூபாய்க்கு விற்பனையான கேரட், 65 - 70 ரூபாய்க்கும் விற்பனையாகின.  6 ரூபாய்க்கு விற்ற மல்லி 12 ரூபாய்க்கும் விற்பனையானது.தொடர்ந்து, பரவலாக மழை பெய்து வருவதால் வரும் நாட்களில் காய்கறி விலை மேலும் உயரும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி - ரூ.65
வெங்காயம் - ரூ.40
அவரைக்காய் - ரூ.55
பீன்ஸ் - 45
பீட்ரூட் - ரூ.28
வெண்டைக்காய் - ரூ.50
நூக்கல் - ரூ.30
உருளைக் கிழங்கு - ரூ.35
முள்ளங்கி - ரூ.30
புடலங்காய் - ரூ.25
சுரைக்காய் - ரூ.25
பாகற்காய் - ரூ.35
கத்தரிக்காய் - ரூ.45
குடை மிளகாய் - ரூ.90
கேரட் - ரூ.85
காளிபிளவர் - ரூ.35
சவுசவு - ரூ.12
தேங்காய் - ரூ.30
வெள்ளரிக்காய் - ரூ.6
முருங்கைக்காய் - ரூ.70
இஞ்சி - ரூ.60
பச்சை மிளகாய் - ரூ.25
கோவைக்காய் - ரூ.35