சென்னையில் வாக்கிங் சென்ற இளம் பெண்ணை மர்ம நபர்கள் சிலர் பாலியல் சீண்டல் செய்து விட்டு தப்பி ஓடிய நிலையில், புகார் அளித்தும் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்ததால், பாதிகக்ப்பட்ட பெண்ணே நேரடியாக களத்தில் இறங்கி குற்றவாளிகளை தேடி கண்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த ஸ்கூபா டைவிங் என்னும் ஆழ்கடல் நீச்சலில் அதிக ஆர்வம் கொண்ட 23 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 8 ஆம் தேதி காலை நேரத்தில், தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள், இந்த பெண்ணின் அருகில் வந்ததும், திடீரென்று கீழே இறங்கி இந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈபட்டனர். அதற்குள், இந்த பெண் சத்தம் போட்டு உதவிக்காக அழைத்ததால், சற்று தொலைவில் சிலர் வாங்கிங்  ந்துகொண்டிருப்பதைப் பார்த்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆன்லைன் மூலமாக எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க வில்லை என்றும் கவனித்த அந்த பெண், “நாமே குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கலாம்” என்று கருதி, களத்தில் இறங்கி உள்ளார்.

அதன் படி, தன்னை பாலியல் சீண்டல் செய்த நிகழ்விடத்தின் அருகில் உள்ள வீடுகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை, அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் எடுத்துக்கூறி, குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தின் எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய வீடியோ காட்சிகளை பெற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த 3 நாட்களில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களையும், அந்த பெண் அடையாளம் கண்டுக்கொண்டார்.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்த சிசிடிவி காட்சிகளை பகிர்ந்து, வீடியோ ஒன்றையும் பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்து இருந்தார். அதில், “அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒரு இடத்தைக் காட்டி, இங்கே நான் மட்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக வில்லை. இந்த வழியாக செல்லும் பல பெண்களும் இந்த இடத்தில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் அருகிலுள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களைத் தேடி கண்டுப்பிடித்திருக்கிறேன்” என்று, கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

“இப்படி அந்த நபர்கள் பிடிப்பட்டாலும், அடுத்து என்ன செய்யலாம்?” என்றும், அந்த பெண் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், “இது போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியே வர அச்சப்படுகின்றனர்” என்றும், தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

அத்துடன், “இந்த நாட்டில் பெண்ணை விட பசு மாட்டிற்கு பாதுகாப்பு அதிகமாக கொடுக்கிறார்கள்” என்றும், அந்த பெண் மிகவும் வேதனையுடன் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். 

இந்த வீடியோ போலீசாரின் உயர் அதிகரிகள் கவனித்திற்கு சென்று உள்ளது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பெண்ணை தொடர்புகொண்டு, அந்த பெண்ணிடம் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்” என்றும், அந்த பெண் போலீசாரிடம் வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்ச்சியாக, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தைரியமான இந்த செயலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.