சென்னையில் வயதுக்கு வராத 11 வயது சிறுமியை குடிசையில் அடைத்து வைத்து, ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞன் ஒருவன் வெறிபிடித்த மிருகம் போல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த ஊரடங்கு காலத்திலும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த செய்தியும் ஒரு சாட்சியே..

சென்னை தீவுத்திடல் பகுதியில் அமைந்து உள்ள சத்தியா நகரில் வசித்து வரும் மணிகண்டன் என்ற இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்த அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 11 வயது சிறுமி மீது சபலப்பட்டு உள்ளான். இதனால், அந்த சிறுமியை நோட்டமிட்ட மணிகண்டன், அந்த சிறுமி கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வரும் போது, பேச்சுக் கொடுப்பது போல் அந்த பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் அடைத்து வைத்துள்ளான்.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியை மணிகண்டன் முரட்டுத் தனமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால், அந்த 11 வயது சிறுமிக்கு ரத்தம் வெளியேறித் தொடங்கி உள்ளது. இதனால், பயந்துபோன மணிகண்டன் அந்த சிறுமியை அங்கிருந்து விடுவித்து உள்ளான். அத்துடன், இங்கே நடந்து குறித்து வெளியே சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும், அந்த சிறுமியை மிரட்டி அனுப்பி வைத்து உள்ளான்.

ரத்த சொட்டச் சொட்ட வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமி, பயந்து நடுங்கிப் போய் இருந்துள்ளார். சிறுமியை பார்த்த அவரது தயார், சிறுமி வயதுக்கு வந்து விட்டார் என்று நினைத்துக்கொண்டு, அந்த சிறுமிக்கு செய்ய வேண்டிய சடங்கு முறைகளைச் செய்யத் தொடங்கி உள்ளார்.

ஆனால், சிறுமிக்கு ரத்தம் நிற்காத நிலையில் சந்தேகப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிறுமியிடமும் அவரின் சக தோழிகளிடமும் விசாரித்து உள்ளனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால், கடும் 

அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் மணிகண்டனை தேடி உள்ளனர். ஆனால், அவன் தலைமறைவாகி உள்ளான். இதனையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்து உள்ளனர். அங்கு, சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து சிறுமியின் தாயார் முத்தையால் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த முத்தையால்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர். அத்துடன், மணிகண்டனின் பெற்றோர்கள் மற்றும் அவனின் நண்பர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வயதுக்கு வராத 11 வயது சிறுமியை குடிசையில் அடைத்து வைத்து, ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞன் ஒருவன் வெறிபிடித்த மிருகம் போல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.