தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நேற்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தது.

மேலும் சென்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, மெரினா, மந்தைவெளி,கோடம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது  தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 19-ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்.  தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.