குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 14 வது நபராக பிபின் ராவத்தும் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவின் முப்படைகளுக்குமான தலைமை தளபதி பிபின் ராவத், தனது மனைவி உள்பட 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே திடீரென்று வெடித்து சிதறியது. 

இதில், 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அத்துடன்,  தலைமை தளபதி பிபின் ராவத், 80 சதவீத தீகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

அதாவது, 

- ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிபின் ராவத், இன்று காலை 9 மணிக்கு தனது மனைவியுடன் புறப்பட்டார்.

- அப்போது, சூளூர் விமானப்படை தளத்தை நோக்கி வந்த சிறப்பு விமானத்தில், மொத்தம் 9 பேர் இருந்து உள்ளனர். 

- இதனையடுத்து தான், காலை 9 மணிக்கு புறப்பட்ட சிறப்பு விமானம் சூளூருக்கு முற்பகல் 11.35 க்கு வந்து உள்ளனர்.

- அங்கிருந்து, Mi 17 ஹெலிகாப்டர் மூலம் நண்பகல் 11.45 க்கு பிபின் ராவத், தனது மனைவி மதுலிகாராவத் உள்பட 14 பேர் உடன், ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சிப் பள்ளியை நோக்கி ஹெலிகாப்டரில் சென்றனர்.

- இப்படியாக, ஹெலிகாப்டரில் சென்றவர்களில் 14 பேரில், 5 பேர் ஹெலிகாப்டர் குழுவை சேர்ந்தவர்கள்.

- இந்நிலையில் தான், மதியம் மிகச் சரியாக 12.20 மணிக்கு அங்குள்ள நஞ்சப்ப சத்திரம் அருகே கட்டேரி என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

- இதில், பிபின் ராவத் புறப்பட்ட சூளூரிலிருந்து விபத்து நேர்ந்த இடம் 96 கிலோ மீட்டர் தொலைவிலும், இறங்க வேண்டிய வெலிங்டன் ராணுவப் பள்ளிக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அந்த விபத்துக்கு உள்ளான இடம் அமைந்திருந்தது.

- முக்கியமாக, இன்னும் கூடுதலாக வெறும் 5 நிமிடங்கள் அந்த ஹெலிகாப்டர் மேற்கொண்டு சென்றிருந்தால், வெலிங்டன் ராணுவப் பள்ளியை அவர்கள் அடைந்திருக்க முடியும். ஆனால், அவர்களது துரதிஸ்டம், வெலிங்டன் ராணுவப் பள்ளியை அடைவதற்கு முன்பே அவர்களது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, அதில் பயணித்தவர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்துவிட்டதாக வரிசையாக அறிவிக்கப்பட்டு வந்தனர்.

- அதே நேரத்தில், இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் ராணுவ உயர் அதிகாரிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

- இந்த நேரத்தில் தான், “ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தததாகவும்” நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

- அதே நேரத்தில், இந்த விபத்தில் பயணம் செய்த 14 பேரில், 13 பேர் இறந்தவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிபின் ராவத் என்ன ஆனார் என்பது குறித்த தகவல் மர்மமாகவே இருந்து வந்தன. 

- இந்த நிலையில் தான், “முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக” இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

- முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மும்பையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர் டெல்லி திரும்பி உள்ளார்.

- இந்த நிலையில்தான், இந்தியாவின் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது.

- மேலும், ராணுவ விமான விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சற்று முன்னதாக குன்னூர் புறப்பட்டு சென்றார்.

- அத்துடன், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இல்லத்திற்கு ராணுவ தளபதி நரவானே வருகை தந்துள்ள நிலையில், அங்கு நடக்கவேண்டிய இறுதி ஊர்வலம் பற்றி அவரது குடும்பத்தினருடன் ஆலோசித்து வருகிறார்.