இங்கிலாந்து நாட்டில் சிறுவர் சிறுமியர் மீது ஈர்ப்பு கொண்டு, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து சுமார் 50 குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் புட் பால் கோச் ஏற்கனவே 31 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் மீது மேலும் சில பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் பாரி பென்னல் தான், இப்படி ஒரு கொடூரமான குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.

66 வயதான முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் பாரி பென்னல், கடந்த 1979 முதல் 1988 ஆம் ஆண்டு வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மீது ஈர்ப்பு கொண்டு, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இப்படியாகக் கிட்டத்தட்ட சுமார் 50 சிறுவர் - சிறுமியர்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் - சிறுமியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், பாரி பென்னலை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இதில், சுமார் ஒன்பது குற்றங்களை மட்டுமே பாரி பென்னல் ஒப்புக்கொண்டாக கூறப்படுகிறது. 

அத்துடன், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் 1991 ஆண்டிற்குள் வரை மட்டும், கிட்டத்தட்ட 8 வயது முதல் 15 வயது வரையிலான 12 சிறுவர் சிறுமிகளை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, அவர் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. 

இதன் காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் பாரி பென்னல் குற்றவாளி என்று, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் பாரி பென்னல், ஒரு “பிசாசு அவதாரம்“ அவதாரம் என்றும் விவரித்தார்.

மேலும், பாரி பென்னல், பயிற்சியாளராக இருக்கும் போது, இளம் கால்பந்து வீரர்களை இரையாகக் கொண்டார் என்றும், நீதிபதி குறிப்பிட்டார். இதனையடுத்து, பாரி பென்னலுக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, அவர் சிறையில் தண்டனை பெற்று வருகிறார். 

இந்நிலையில், பாரி பென்னல் மீது மீண்டும் சில குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, “11 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளிடம் பாரி பென்னல் மோசமாக நடந்துகொண்டதாக மேலும் 9 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வீடியோ கால் மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் தன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த கட்ட விசாரணையானது, அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.