மதம் மாறியவர்களுக்கு, கலப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.marriage certificate

தமிழகத்தில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேட்டூரில் வசிக்கும்  கிரிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்த நிலையில், கலப்பு மண சான்று கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பம் 1997-ம் ஆண்டு அரசாணைப்படி மத மாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால்  நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம் கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதம் மாறியவர்களுக்கு சாதி மறுப்பு திருமண சான்று வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் ஒருவர் மதம் மாறுவதால் அவருடைய சாதி மாறுவதில்லை எனவும், மதம் மாறியவருக்கு சாதி மறுப்பு மணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்  எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.