தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் ஆளும் மன்னனுக்கு கேடு என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவ பக்தர்களின் பெரும் விழாவான ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு  நடைபெற இருந்த தேரோட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா  வருகை தந்தார். அவருக்கு கோவில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்பமரியாதை அளித்து கோவிலுக்குள் அழைத்து சென்றனர். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, 

“கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சன விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகிய திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.

natarajar vizha

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை 19 ஆம் தேதி நடராஜர் கோயில் தேரோட்டமும், 20 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற இருந்தது.

தமிழக கோவில்களில் நடைபெறும் தேர் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.சிதம்பரம் கோவிலில் தேர் ஓட வில்லை என்றால் அது மன்னருக்கு தான் ஆபத்து. 

தற்போது மன்னர் யார் என்று உங்களுக்கு தெரியும். தற்போது மன்னர் என்றால் முதல்வர். கள்ளச் சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் சென்ற காந்தி அமைச்சராக இருக்கிறார். கோவில் நகைகளை உருக்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயசக்திகள் இந்த கோவிலை எப்படியாவது அபகரிக்க பல தடவை முயற்சி செய்துள்ளது. ஆனால் அரசு எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. 

காரணம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 26-ன் படி சம்பிரதாய பிரிவுகளை பாதுகாக்க தனி சட்டப்பிரிவு உள்ளது. சிதம்பரத்தில் சட்டப்படி மத விழாக்களுக்கு அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை. 

சிதம்பரத்தில் சட்டப்படி மத விழாக்களுக்கு அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை. ஆனால் தனியார் கோயிலான இங்கு தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் வருகிறது. சர்ச்சுகளில் கிறிஸ்தமஸ் விழாவிற்கு தடை விதிக்க முடியுமா? சிதம்பரத்தில் தலையிட காரணம் என்ன?.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் கோவில் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஏன் தேவாலயங்கள் மற்றும் மசூதி ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தவில்லை.

h rajaதமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா உச்சத்தில் இருந்த போதே தேரோட்டம் நடைபெற்றது.  தேரோட்டம் நடத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. சேலத்திற்கு முதல் அமைச்சர் சென்றபோது பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். 

கொரோனோ கட்டுப்பாடுகள் இருக்கும் போது முதல் அமைச்சர் விழாவில் பொதுமக்கள் கூடலாம். ஆனால் கோவில் விழாக்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இது என்ன நியாயம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை என்றால் பக்தர்கள், இந்து அமைப்பினரை ஒன்று திரட்டி கோவிலின் முக்கிய வீதிகளில் முன்பு திரண்டு சிதம்பரம் நகரை ஸ்தம்பிக்க வைப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.