பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா - தங்கை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் மாநிலத்தில் உள்ள சுபால் மாவட்டத்தில் தான் இந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. சுபால் மாவட்டம் ஹுசைனாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பக்கத்து ஊரில் நடக்கும் கண்காட்சியைப் பார்ப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தனர்.

Bihar Sister Gang rape

அப்போது, அந்த பகுதியில் உள்ள சிலோன் ஆற்றைக் கடந்து, அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர், அந்த குடும்பத்தில் உள்ள 2 சகோதரிகளைத் தனியாக அழைத்துச் சென்ற நிலையில், அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை அங்கேயே துப்பாக்கி முனையில் நிற்க வைத்துள்ளனர்.

அழைத்துச் செல்லப்பட்ட சகோதரிகளில் ஒரு பெண் 18 வயதுக்குக் குறைவானர் என்றும்,  மற்றொரு பெண்ணுக்கு 20 வயதுக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  இதனிடையே, தனியாக அழைத்துச் சென்ற சகோதரிகளை, அந்த மர்ம கும்பல் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், மிரட்டலையும் மீறி மூத்த சகோதரி கடுமையாக அவர்களுடன் போராடி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், அந்த பெண்ணை தாக்கிவிட்டு, துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

Bihar Sister Gang rape

இதில், படுகாயம் அடைந்த அந்த பெண், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கி முனையில் அக்கா, தங்கையைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.