திருநங்கை மர்லிமாவிற்கு சிறந்த திருநங்கை விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மாலிமா அவர்களுக்கு சிறந்த திருநங்கை விருது  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதினை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா அவர்களின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான ஒரு  இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர், திருமதி.த.ரத்னா, இ.ஆ.ப., மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்தகி நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 89 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.