17 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அடுத்த திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகில் உ்ளள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் தென்றல் நகரில் சரவணன் - அமுதா தம்பதியினர் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு தற்போது 14 வயதில் மகள் இருக்கிறார். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் தான், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் 14 வயது சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்த காதல், அந்த சிறுவர் - சிறுமியருக்குள் நெருக்கமான பழக்கமாக மாறி உள்ளது.

இப்படியாக, அந்த 14 வயது சிறுமியும், அந்த 17 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த சிறுவன், இந்த 14 சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி, பல முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்த சிறுமி அடுத்த 2 மாதத்தில் கர்ப்பம் ஆகி உள்ளார். இந்த விசயம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக அந்த இளைஞனின் பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் சென்று முறையிட்டு உள்ளனர்.

அப்போது, இரு வீட்டார் பெற்றோரும் கூடி பேசிய நிலையில், அவர்களுக்குள் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் 14 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்து உள்ளனர். 

இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, அந்த 14 வயது சிறுமிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. 

இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் அந்த சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்து உள்ளனர்.

அதன் படி, சிறுமிகக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த 14 வயது சிறுமிக்கு நேற்று முன் தினம் பெண் குழந்தை பிறந்து உள்ளது. 

அத்துடன், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து ஆவடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து விரைந்து வந்த மகளிர் போலீசார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 17 வயது சிறுவனை போலீசார் தற்போது கைது செய்தனர். 

இதனையடுத்து, அந்த சிறுவனை போலீசார் திருவள்ளூரில் சிறார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

அதே நேரத்தில், சிறுமிக்கு குழந்தை பிறந்து உள்ளதால் அவர் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையில் வைக்கப்பட்டு உள்ளார். 

இதனிடையே, 17 வயது சிறுவனால், 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.