16 வயது சிறுமியிடம் பிரபல ரவுடியின் 65 வயது தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா தொற்று காலத்தில், அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும், அரசு சொல்வதையும் மீறி, சட்டத்தையும் மீறி 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதற்கு மேலும் ஒரு சாட்சியாக சென்னை அரும்பாக்கத்தில் பிரபல ரவுடியின் தந்தை, சிறுமியிடம் பாலியில் அத்து மீறலில் ஈடுபட்ட இந்த சம்பவமும் அமைந்திருக்கிறது.

சென்னை அரும்பாக்கம் வள்ளுவர் நெடும்பாதை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ராமானுஜம், வசித்து வருகிறார். இந்த ராமானுஜம், பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாவின் தந்தை ஆவார். 

இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ராமானுஜம் வீட்டிற்கு உறவினர் மகளான 16 வயது சிறுமி வந்து தங்கி உள்ளார். அப்போது, வீட்டில் வீட்டில் தங்கியிருந்த அந்த 16 வயது சிறுமியிடம், ராமானுஜம் தவறாக நடக்க முயன்று உள்ளார். அதாவது, அந்த 65 வயது முதியவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி சத்தம் போட்டு கடும் கூச்சலிட்டு உள்ளார்.

அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள், ஓடி வந்த பார்த்து உள்ளனர். அப்போது, அந்த முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு அங்குள்ள அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அப்போது, ரவுடியின் தந்தை ராமானுஜம், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த 65 வயது முதியவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

அதே போல், கள்ளக்குறிச்சி அருகே 15 வயது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலையின் 15 வயது மகள் அனு என்கிற நிஷாந்தினி, அதே ஊரில் உள்ள 
அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, கொரோனாவால் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை நிஷாந்தினி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் அமர்ந்து இருந்து உள்ளார். இதனால், அவரது தந்தை, “வீட்டு 
வேலை செய்யாமல் ஏன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டு கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த 15 வயது சிறுமி, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தின் உதவியுடன் நிஷாந்தினியை மீட்ட அவரது தந்தை, அருகில் உள்ள 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வேக வேகமாகக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நிஷாந்தினியின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில், அங்குள்ள வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.