பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா அடித்திக்கொலை செய்யப்பட்டார். 

அரியலூர் மாவட்டம் கோவில்யசனை கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான செல்வராஜ்க்கு, ஜான்கிலின் ரிட்டா என்ற மகளும், பாக்கியராஜ் என்ற மகனும் உள்ளனர். 

Ariyalur old man murder by nephew

மகள் ஜான்கிலினுக்கு, டிசோசா என்பவருடன் திருமணமான நிலையில், அவர்களுக்குத் திருமண வயதில் கிரிஜா என்ற இளம் பெண் இருந்துள்ளார். இந்நிலையில் கிரிஜாவை, தனது தம்பி பாக்கியராஜுக்கு ஜான்கிலின் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், 61 வயதான தாத்தா செல்வராஜ்; தனது பேத்தியும், மருமகளுமான கிரிஜாவிடம் மது போதையில் அத்துமீறித் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிரிஜாவின் தந்தை டிசோசா, மாமனார் செல்வராஜுடன் சண்டைக்குச் சென்றுள்ளார். 

அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த டிசோசா, அருகில் கிடந்த மூங்கில் கம்பால், செல்வராஜை தாக்கி உள்ளார். இதில், செல்வராஜ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Ariyalur old man murder by nephew

இது குறித்து விரைந்து வந்த வெங்கானூர் போலீசார், டிசோசாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.