தனது காதல் மனைவியை அழைத்துச் செல்ல நடுரோட்டில் ஒருபக்கம் கணவன் போராடிய நிலையில், இன்னொரு பக்கம் அந்த பெண்ணை அவரது கள்ளக் காதலன் அனுப்ப மறுத்ததால், கொலையில் முடிந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து, அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார். 

இதனையடுத்து, இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலி மாலதியை, பிச்சமுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். 

இதனையடுத்து. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இப்படி, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலன் கணவன் பிச்சமுத்துவை, அவரது மனைவி மாலதி பிரிந்து சென்றுவிட்டார். 

மனைவி பிரிந்து சென்றது முதல், அவரது கணவர் பிச்சமுத்து, ஒவ்வொரு ஊராகச் சென்று தனது மனைவியை தேடி வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், காதல் கணவனை பிரிந்து சென்ற மாலதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் டீக்கடையில் வேலை செய்து  வந்திருக்கிறார். 

அப்போது, அந்த டீக்கடையில் மாஸ்டராக இருந்த வேலு என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன், கடையின் மாஸ்டர் வேலுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்,  அவருடன் மாலதி கள்ளத் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

மேலும், டீ கடையில் வேலை முடித்து விட்டு, வேலு வீட்டிற்கு சென்ற பிறகு சாலையோர கடைகளின் வாசலில் தனது எஞ்சிய காலத்தை மாலதி கழித்து வந்திருக்கிறார். 

அப்போது, ரொம்ப தூரப் பயணம் செல்லும் ஓட்டுநர்கள் பலரும், மாலதிக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்திற்கு மாலதி தள்ளப்பட்டார். இப்படியாக, மாலதி மது அருந்திவிட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். 

இவற்றுடன், அந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சில ஆண் நண்பர்களுடனும், மாலதிக்கு தகாத பழக்கம் ஏற்பட்டு அவர்களுடனும் மது அருந்திவிட்டு உல்லாசமாகவும் அவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மாலதியின் இந்த மது மற்றும் பிற ஆண்களுடனா பழக்கம் கள்ளக் காதலன் வேலு, தான் டீக்கடையில் வேலை பார்த்து வந்த மாஸ்டர் வேலையை விட்டு விலகி, அவர் முழு நேரமாகக் கள்ளக் காதலி மாலதி உடனேயே தங்கி குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், காணாமல் போன தனது மனைவி உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதைக் கேள்விப்பட்ட பிச்சமுத்து, தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு, அங்கு வந்திருக்கிறார்.

அங்கு, தனது மனைவி மாலதியை பார்த்து, “நீ எனக்காக இல்லை என்றாலும், நமது இரு பிள்ளைகளுக்காக நீ வீட்டுக்கு வா” என்று, அவர் அழைத்திருக்கிறார்.

ஆனால், கணவனுடன் வீட்டிற்குச் செல்ல மாலதி மறுப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த கள்ளக் காதலன் வேலு, “மாலதியை அனுப்ப முடியாது” என்று கூறி, பிடிவாதம் பிடித்திருக்கிறார்.

இதனால், அந்த பெண்ணின் கணவனுக்கும் - கள்ளக் காதலனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது, கடும் கோபம் அடைந்த கணவன் பிச்சமுத்து, டீக்கடையில் இருந்த விறகு கட்டையை எடுத்து வேலுவை அடித்திருக்கிறார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதனைப்பார்த்த அந்த பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், பிச்சைமுத்துவை கைது செய்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.