ஆந்திராவில் காதலியுடன் நெருங்கிப் பழகி திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது, காதலி ஆசிட் வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரா என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்ற இளம் பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். நாகேந்திராவின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல், அந்த பெண்ணும், நாகேந்திராவின் காதல் வலையில் சிக்கி உள்ளார்.

இருவரும் காதலர்களாக மாறிய பின்பு,  நாகேந்திராவும் - அமுதாவும் காதல் ஜோடிகளா அப்பகுதியில் ஊர் சுற்றத் தொடங்கி உள்ளனர். அத்துடன், காதலர்கள் இருவரும் நெருங்கிப் பழகியே வந்துள்ளனர். அமுதாவும், தான் திருமணம் செய்துகொள்பவர் தானே என்று, தன் காதலனுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

அதே நேரத்தில் அமுதாவுடன் காதல் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அமுதாவை கண்டுகொள்ளாமல், வேற ஒரு பெண்ணை நாகேந்திரா தன் காதல் வலையில் வீழ்த்தி, அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமுதா வீட்டில் திருமணம் பற்றி பேச்சு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், “என்னை உட்டியாகத் திருமணம் 

செய்துகொள்ளுங்கள்” என்று, அமுதா தன் காதலன் நாகேந்திராவிடம் கூறி உள்ளார். ஆனால், நாகேந்திரா தன் காதலி அமுதாவைத் திருமணம் செய்துகொள்ளாமல், அவரை கழற்றி விடும் நோக்கிலேயே இருந்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த முதல் காதலி அமுதா, “ஏன் திருமணம் செய்ய முடியாது?” என்று, நாகேந்திராவிடம் விளக்கம் கேட்டு உள்ளார். அதற்குக் காதலன் நாகேந்திரா, அலட்சியமாகப் பதில் அளித்து உள்ளார். ஆனால், அமுதா தொடர்ந்து தொந்தரவு செய்யவே, “உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று, நாகேந்திரா திட்ட வட்டமாகக் கூறி உள்ளார்.

அதனையடுத்து, நாகேந்திரா தனது 2 வது காதலி உடன் மாயமாகி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல் காதலி அமுதா, காதலன் நாகேந்திராவை தேடி கண்டுபிடித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அமுதா தன் காதலனை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஏதோ பேசுவது போல், பேச்சுக் கொடுத்துக்கொண்டே, தான் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற ஆசிட்டை காதலன் மீது வீசி உள்ளார். அப்போது, அதனைக் காதலன் நாகேந்திரா தன் கையை வைத்து மறைத்துள்ளார். இதனால், அந்த ஆசிட் தன் கை மற்றும் கண்ணத்தின் ஒரு பகுதியில் பட்டு உள்ளது. ஆசிட் பட்ட வேகத்தில், பயங்கர காயங்கள் ஏற்படவே, அவர் வலியால் துடித்து உள்ளார்.

இதனையடுத்து, காதலி அமுதா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர், ஆசிட் வீச்சு ஆளான நாகேந்திராவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த கர்னூல் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், காதலியைக் கழற்றிவிட்ட நாகேந்திராவை தாக்க, அவரின் முதல் காதலி அமுதா, ஏற்கனவே ஒருமுறை முயன்றுள்ளார் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தலைமறைவான அமுதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த கால காதல் கதைகளில், காதலியைத் தேடித் தேடி காதலன் ஆசிட் அடிக்கும் சம்பங்கள் எல்லாம் காலம் மாறி, இன்று ஏமாற்றப்பட்ட காதலி, ஏமாற்றிய காதலனைத் தேடித் தேடிச் சென்று ஆசிட் அடிக்கும் அளவுக்குக் காலம் மாறிப்போய் விட்டது குறிப்பிடத்தக்கது.