கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அச்சம் காரணமாக, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு, இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்த தடை இல்லை என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்து அதனை உறுதி செய்தது. 

இதையடுத்து, இறுதிசெமஸ்டர் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம், இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்தப்பட உள்ளதாகவும் கூறியது. இதைத்தொடர்ந்து, பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாதிரி ஆன்லைன் தேர்வு 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வுக்கு கேமரா, மைக்ரோ போன் வசதி கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும், விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்வித்தாள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு முன்பு, மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும், மாணவர்கள் வீடுகளில் இருந்து தேர்வு எழுதலாம் எனவும், பயிற்சித் தேர்வின் போது இறுதி தேர்வுகள் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறுதியாண்டு மாணவர்கள் தங்களது மொபைல் எண், இமெயில் விவரங்களை பல்கலைக்கழக செயலியில் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாதிரி ஆன்லைன் தேர்வு வருகிற 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும். அதில், 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுக்கான பொதுவான விதிமுறைகளாக பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது :

* ஏ4 தாளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும். தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

* விடைகள் 18 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

* விடைத்தாளை ஸ்கேன் செய்து ஒரு மணி நேரத்துக்குள் பல்கலைக்கழக இணைப்பில் உள்ள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

* அதற்கான வசதி இல்லாமல், இணையத்தில் பதிவேற்ற முடியாதவர்கள் விரைவுத் தபால் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம்.

* அருகிலேயே கல்லூரி இருந்தால் நேரில் சென்று விடைத்தாளை அளிக்கலாம்.

* விடைத்தாளின் மேல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பக்க எண், பாடப்பிரிவு உள்ளிட்டவற்றைக் கட்டாயம் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெவ்வேறு தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியலிட்டுள்ளன.

இந்த நிலையில் அன்மையில் அண்ணா பல்கலைகழகத் தேர்வு துறை மாநிலம் முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இறுதி ஆண்டு பயிலும் எத்தனை மாணவர்களிடத்தில் செல்போன் வசதி உள்ளன? எவ்வளவு பேர் டேப் பயன்படுத்துகிறார்கள்? கணினி வசதி உள்ள மாணவர்கள் எத்தனை பேர்? உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். அதில் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்களே இல்லை என்ற விவரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் எந்தவித சிக்கலுமின்றி ஆன்லைன் வழியில் தேர்வினை நடத்த இயலும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.