டிக்டாக் பிரபலாக இருந்த திருச்சி சாதனா, திடீரென்று பெண் சாமியார் போன்று வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகம் பேசப்பட்டவர் புதிதாக சாமியார் அவதாரம் எடுத்திருக்கும் அன்னப்பூரணி அரசு அம்மா தான்.

அதாவது, ஃபேஸ்புக் பக்கத்தில் “நான் தான் ஆதிபராசக்தியின் புதிய அவதாரம்” என்று கூறிக்கொண்டு, அன்னபூரணி என்ற பெண், பொது மக்களுக்கு அருள் வாககு கூறி வருவதாக, வித விதமான புதிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது, தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இதனால், தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்குள் பெண் சாமியார் அன்னபூரணியை பற்றிய செய்திகளும், வதந்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கட்ட தொடங்கின.

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தள பக்கங்களில் பெண் சாமியார் அன்னபூரணி, பேசும் பொருளாகவே மாறி இருக்கிறார். இதனால், இவரைப் பற்றிய செய்திகள் இணையத்தில் பெரும் வைரலாகிக்கொண்டு இருக்கின்றன.

இப்படியாக, கடந்த சில நாட்களாக ட்ரெண்ட் ஆகி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அம்மாக்கு மொத்தம் 3 கணவர்கள் இருப்பதாகவும், ஆனால், அவர் தற்போது 4 வதாக ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், கடந்த வாரம் புதிது புதிதாக செய்திகள் உலா வந்தன.

இதனையடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த அமைப்புகள் புகார் அளித்த நிலையில், மறுநாள் காலையில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக” பெண் சாமியார் அன்னப்பூரணி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தமிழ்நாட்டில் மேலும் ஒரு பெண், சாமியார் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, திருச்சியைச் சேர்ந்த சாதனா என்ற இளம் பெண், டிக்டாக் மூலம் தமிகழத்தில் பிரபலமடைந்தார். 

ஆனால், இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகும், ஆபாசமாக நடனமாடியும், ஆபாச வார்த்தைகளால் மற்றவர்களை திட்டியும் ஒரு பொழுது போக்கிற்காக பல வீடியோக்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் இந்த திருச்சி சாதனா.

முக்கியமாக, “ஆபாச உடை அணிந்துவாறு மற்றவர்களை கேலியும், கிண்டல் செய்யும் அலப்பறைகளை, இணையத்தில் இவர் லைவ் வீடியோவாக வெளியிட்டு, பொது மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக மாற முயன்றார். இதனால், இவரை ரசித்து பார்க்கும் ஒரு பட்டாளமும் இங்கு உண்டு.

அப்படியான ரசிகர் பட்டாளத்தை மேலும் தன் பக்கம் ஈர்க்கும் வகையில், இளம் பெண் சாதனா, தனக்கான ஒரு கூட்டத்தை நடிக்க வைத்து அதில் அவரே “அம்மன் வேடம் அணிந்து, முழு எலுமிச்சை பழத்தை கடித்து திண்பதும், கண்களை உருட்டுவது போன்று பல செய்கைகள் செய்தும்” செய்து, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சாதனா. 

இணையத்தில் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், “நீ சாமியா?” என்று, கேட்டு பலரும் கொந்தளித்து உள்ளனர். அத்துடன், இப்படியாக, பெண் சாமியார் போர்வையில் வலம் வரும் இவரைப் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும், இணையத்தில் பலரும் வலியுறுத்தி உள்ளனர். 

இதனால், திருச்சி சாதனா சாமியார் அவதாரம் எடுத்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.