மகளின் தோழிக்கு, மகள் பேசுவது போல் ஆபாச சாட்டிங் செய்து, பாலியல் தொல்லை கொடுத்த தந்தையால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவில் வெள்ளாளசெட்டித் தெருவை சேர்ந்த 38 வயதான வேல்முருகன் என்பவர், அந்த பகுதியில் தனியார் பேட்டரி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

அத்துடன், 38 வயதான வேல்முருகன், தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர், தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இவருடைய மகள் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

வேல்முருகன் மகள் படிக்கும் அதே பள்ளியில் படித்து வரும் மற்றொரு 15 வயதான மாணவி, வேல்முருகன் மகளோடு நெருங்கிப் பழகி வந்த நிலையில், இருவரும் இணைப்பிரியாக தோழிகளாக வலம் வந்தனர். 

இந்த நெருங்கிய நட்பால், வேல்முருகனின் மகள், தனது தோழியை தன்னுடைய வீட்டிற்கு நாள்தோறும் அழைத்து வந்து, வீட்டில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்பது வழக்கமாக நடந்துகொண்டிருந்தது. 

அப்போது, தனது மகளின் 15 வயது தோழி மீது சபலப்பட்ட 38 வயதான வேல்முருகன், மகளின் தோழிக்கு மகள் அனுப்புவதை போலவே, வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்று உள்ளார். 

அப்போது, அந்த மாணவியின் பாட்டி வீட்டிற்குள் வந்து உ்ளளார். இதனால், சற்று சுதாரித்த வேல்முருகன், சட்மென்று வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். 

இதைத்தொடர்ந்து, மாணவிக்கு வேல்முருகன் தொடர்ந்து மகள் அனுப்புவதைப் போன்றே, ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த வாரம் அதிமுக பிரமுகரான இந்த வேல்முருகன், அந்த மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சென்று
உள்ளார்.

அந்த வாடகை வீட்டில் இருந்தவாறே, அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால், கடும் மன உளைச்சளுக்கு
ஆளான அந்த 15 வயது மாணவி, இது தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.  

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிமுக பிரமுகர் வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிரமாக விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.