தனது ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் இன்று நடைபெற உள்ள அதிமுக ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தல் களம் பரபரப்பாகி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மும்மராக இயங்கி வருகின்றன. சில தினங்கள் முன்பு அதிமுக 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அது தவிர நமக்குக் கிடைத்த தகவலின்படி நாம் வெளியிட்ட 54 பேர் என இதுவரை அறுபது வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளைப் பார்த்திருக்கிறோம். இந்தநிலையில், அ.தி.மு.க போட்டியிடவிருக்கும் 171 தொகுதிகளில், சரிசமமாக தன் ஆதரவாளர்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என ஓ.பி.எஸ் போர்க்கொடி உயர்த்த இன்று தலைமை அலுவலகத்தில் நடக்க வேண்டிய ஆலோசனைக் கூட்டம் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.