“இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே” என்று ஆபாசப் பட நடிகை கொந்தளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை 25 வயதான ரினி கிரேசி, ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்றுப் பல பரிசுகளை வென்று குவித்துள்ளார். அத்துடன், கடந்த 2015 ஆம் ஆண்டில் இவரது மார்கெட் அந்நாட்டில் உச்சத்திலிருந்தது. அதன் பிறகு மார்கெட் சற்று குறைந்த நிலையில், ஓரளவுக்கு வருமானம் ஈட்டி வந்தார்.

Popular glamour actress warns not to enter if you are Indian

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவியதால், உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கரா் பந்தயங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் முடங்கிப்போனது. இதன் காரணமாக, வருமானம் இன்றி பெரிய அளவில் அவர் தவித்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில், ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. தொடக்கத்தில், ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கிய அவர், அதிக அளவிலான வருமானம் கிடைப்பதால், அவர் தொடர்ந்து சில படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார். 

Popular glamour actress warns not to enter if you are Indian

குறிப்பாக, “நிர்வாண புகைப்படங்களை விற்றே சுமார் 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கழள அவர் சம்பாதித்துள்ளதாகவும்” கூறப்படுகிறது. 

மேலும், “ஆபாசப் பட உலகை விட்டுச் செல்ல தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்றும், சில காலம் நடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும்” ரினி கிரேசி கூறியுள்ளார். 

அத்துடன், “ஆபாசப் படங்களில் நடிக்க நான் எடுத்த முடிவு மிகவும் சரியானது என்று உணர்வதாகவும், ஆபாசப் படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு நிறையச் சம்பாதிக்கிறேன் என்றும், இந்த பணம் என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது” என்றும் ரினி கிரேசி சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இதனிடையே, ரினி கிரேசியின் ஆபாசப் படங்களைப் பல இந்தியர்கள் குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும்” அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், தனக்கு வரவேண்டிய வருமானம் பாதிக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Popular glamour actress warns not to enter if you are Indian

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆபாசப் பட நடிகை ரினி கிரேசி, “எனது இணையப் பக்கத்தில், போலி பக்கங்களை உருவாக்குவதையும், சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ளுமாறு” பயனர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

குறிப்பாக, “நான் உங்களுக்கு சொந்தமல்ல. எனது பக்கங்களை உருவாக்குவதை நிறுத்தி, எனது வீடியோக்களையும் படங்களையும் சட்டவிரோதமாகப் பகிர்வதை நிறுத்துங்கள். நான் இப்போது இந்தியர்களை விரும்பவில்லை. நீங்கள் இந்தியர் என்றால், இப்போது எனது பக்கத்திலிருந்து வெளியேறி விடுங்கள். உங்களை  இங்கு வரவேற்கவில்லை” என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அத்துடன், “போலி பக்கங்களை உருவாக்குதல் மற்றும் சட்டவிரோதமாக எனது படங்களைப் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும்” ரினி கிரேசி கொந்தளித்துள்ளார்.