கொலை மிரட்டல் விடுத்த நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தானா சேர்ந்த கூட்டம்” உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.

meera mithun

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், தனக்கு இங்குப் பாதுகாப்பு இல்லை” என்றும் குற்றம்சாட்டினார்.  

குறிப்பாக, “இங்குள்ள போலீசார், தனக்கு எதிராக இருப்பவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும்” சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். “இதனால், தான் தமிழகத்தை விட்டு மும்பைக்கு சென்றதாகவும், காவல்துறையினர் சரியாகச் செயல்பட்டிருந்தால், தான் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இருந்திருக்காது” என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

meera mithun

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பிறகு, மீரா மிதுனிடம், ஹோட்டலில் மேலாளர் சென்று, இதுபோன்ற சர்சசைக்குறிய கருத்துக்களை இங்கிருந்து பேசக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு, “தான் அப்படிதான் பேசுவேன்” என்று கூறி வாக்குவாதம் செய்ததோடு, ஹோட்டல் மேலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

meera mithun

இது தொடர்பாக ஹோட்டல் மேலாளர் அருண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த நடிகை மீரா மிதுன் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.