சமீபத்தில்  பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு சித்ரா தற்கொலை செய்துக்கொள்ளவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பெரும்பாலனவரின் கருத்தாக இருந்தது. இதனையொட்டி ஆர்.டி.ஒ விசாரணை நடைப்பெற்றது, தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் இன்று கணவர் ஹேமநாத் ரவி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.


பாண்டியன் ஸ்டோர் தொடரில் கதிர் - முல்லை ஜோடிக்கென்று தனியாக ரசிக கூட்டம் இருந்து வந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் இனிமே யார் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருந்தது.


இந்நிலையில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தங்கச்சியாக நடிக்கு நடிகை காவியா தற்போது முல்லையாக நடிக்க உள்ளார். பாண்டியன் ஸ்டோரின் முதல் நாள் ஷூட்டிங்கில் முல்லையாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.


பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா, தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது சீரியலில் நடித்து வருகிறார், கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் ஏராளமான போட்டோ ஷூட் நடத்தி பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.


பாரதிகண்ணம்மா  சீரியலிலும் அமைதியாக , பொறுமையான பெண் கதாப்பாத்திரம் என்பதால் , முல்லை கதாப்பாத்திரத்துக்கு பொருந்துவார் என்று கூறப்படுகிறது.