சென்னையில் நடிகையின் சகோதரர் ஒருவர் போலீசாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்”, “என் புருஷன் குழந்தை மாதிரி”, “தை பொறந்தாச்சு” உள்ளிட்ட ஏராளமான படங்களில்  கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாபிலோனா. தற்போது, சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

Tamil Nadu Woman attacks Chennai policeman

இவரது தம்பி விக்கி, சென்னை சாலிகிராமம் புஷ்பா காலணியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு சாலிகிராமம் பகுதியில் சாலையில் சென்ற வாகனனை வழிமறித்து விக்கி, குடிபோதையில், தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவலர் சங்கர் ஆகியோர், விக்கியை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது போதையின் உச்சத்திலிருந்த விக்கி, காவலர் சங்கரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

Tamil Nadu Woman attacks Chennai policeman

இதனால், அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் பழனி, விக்கியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, காவலர் சங்கர் தன்னை பணி செய்ய விடாமல் தாக்கியதாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்த போலீசார், போலீசாரை தாக்கியது, அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.