ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாரிசு நடிகரை, போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

“வட சென்னை”, “கிழக்கு சீமையிலே”, “சீவலப்பேரி பாண்டி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் வில்லன் நடிகர் சூர்யகாந்த்.

இவரது மகன், விஜய் ஹரிஷ் “நாங்களும் நல்லவங்கதான்” என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடைய காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

Actor Vijay Harish arrested for rape charges

பின்னர், கடந்த ஜனவரி 2 ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள நண்பருக்குச் சொந்தமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற நடிகர் விஜய் ஹரிஷ், மாணவிக்கு குடிப்பதற்கு மயக்க மருந்து கலந்து மாதுளம் பழ ஜூஸ் கொடுத்ததாகத் தெரிகிறது. இதைக் குடித்த மாணவி மயங்கிடவே, விஜய் ஹரிஷ் மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Actor Vijay Harish arrested for rape charges

மேலும், மாணவி மயக்க நிலையில் இருக்கும்போது, மாணவியை ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு, ஆசை வரும்போதெல்லாம் உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், பயந்துபோன மாணவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துணை ஆணையர் ஜெய லட்சுமியிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், விஜய் ஹரிஷை,  கைது செய்தனர்.

Actor Vijay Harish arrested for rape charges

இதனையடுத்து, நடிகர் விஜய் ஹரிஷிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Actor Vijay Harish arrested for rape charges

இதனிடையே, சென்னையில் கல்லூரி மாணவிக்குப் பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து, நடிகர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.