ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிசட்டியை நடிகர் சூர்யா காண்பித்தது தவறு அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் கருத்து தெரிவித்தார்.

seemanநடிகர் சூர்யா, தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் பட சர்ச்சையால் நடிகர் சூர்யாவை வன்னியர் இன மக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் வன்னியர் மக்களை இழிவு படுத்தும் விதமாக ஜெய் பீம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் வன்னியர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்றும் ரு.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்தார். இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ்க்கு  நடிகர் சூர்யா பதில் அறிக்கையாக எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத  யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறாரகள் இதில் சாதி இன் மதம் மொழி பேதம் இல்லை சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன் சமத்துவம் சகோதரத்துவம் பெறுக அவரவர் வழியில் தொடர்ந்து செயல் படுவோம் என்று புரிதலுக்கு நன்றி என சூர்யா அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு கொடுத்துவருகினறனர். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் அதனை தொடர்ந்து நடிகை ரோகினி, இயக்குனர் பாரதிராஜா போன்ற திரை பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கினறனர். எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் நாடு முழுவதும் நடிகர் சூர்யாவிற்கு உள்ளது. வன்னியர்கள்  விமர்சனங்களை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் #istand withsurya  என்ற hashtag-யிட்டு மக்கள் தங்கள் ஆதரவுகளை சூர்யாவிற்கு  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் , கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரனார் அவர்களின் 85வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில்  உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:  ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை நிச்சயம் நம்மால் ஏற்று கொள்ளாமல் இருக்க முடியாது. ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிசட்டியை நடிகர் சூர்யா காண்பித்தது தவறு அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாம்.  'அக்னி கலசம்' என்பது வன்னியர்களுக்கு உரியது என்று உலகிற்கே தெரியும்.  அப்படி இருக்கையில் அந்த முத்திரையை ஏன் 'ஜெய் பீம்' படத்தில் பயன்படுத்த வேண்டும?  அந்த முத்திரையை படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம்.  நான் அந்த காட்சியை பார்க்க தவறி விட்டேன் இல்லையென்றால் நானே சூர்யாவிடம் நேரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி பேசிறுப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.

மேலும் அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் நீக்கிருக்க வேண்டும். ஜெய்பீம் ஒரு சிறந்த திரைப்படம் அது வெற்றி பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது இனி அதை பற்றி பேசி பயனில்லை எனவும் எட்டி உதைப்பதற்கு சூர்யா என்ன செந்திலா சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு பரிசு தொகை என்று அறிவித்தவரை உதைத்தால் நான் பணம் தருகிறேன் என்றார் சீமான் தெரிவித்தார் .

இந்நிலையில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குறியது என்றும் கூறினார். திராவிடம் என்றால் சமூகநீதி என்று குரல் எழுப்பிகிறார்கள். ஆனால் எங்களுக்கு தான் தெரியும் அது சமூக நீதியா அல்லது அநீதியா என்று. இதுவரை திமுக எந்த ஒரு பொது தொகுதியிலும் ஆதி தமிழகுடி மக்களை நிறுத்தியது இல்லை.ஆனால் நாங்கள் நிறுத்தி உள்ளோம் என சீமான் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் தயாராக உள்ளதாகவும் , நாங்கள் ஒன்றும் கூட்டணியாக  யாரிடமும் சென்று நிற்கவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.