ஆதிபரா சக்தியாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறி இணையத்தில் கடந்த சில நாட்களாக ட்ரெண்ட் ஆகி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அம்மாக்கு மொத்தம் 3 கணவர்கள் இருப்பதாக செய்திகள் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா' என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் “தன்னை தானே ஆதிபராசக்தியின் அவதாரம்” எனக் கூறிக் கொண்டு, பக்தி பரவசத்தில் பொது மக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கின்றன.

ஆனால், இப்படி திடீரென்று தமிழ்நாட்டில் தோன்றி உள்ள இந்த “பெண் சாமியார் யார்?” என்று தேடிச் செல்லும் போது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் டி.வியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்த “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியில் தான், இந்த பெண் சாமியரான அன்னபூரணி காதல் பஞ்சாயத்து வரை வந்திருந்ததை, கடந்த காலத்தில் தமிழ்நாடே பார்த்து ரசித்தது.

இந்த நிலையில் தான், இந்த பெண் சாமியார் அன்னபூரணி பங்கேற்ற “சொல்வதெல்லாம் உண்மை” வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது.

இந்த ஆதிபரா சக்தி அன்னபூரணி அம்மாவின் சாமியார் அவதாரம் தொடர்பாக இணையத்தில் தெரிக்க விட்டு வரும் நெட்டிசன்கள், 'நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு இருப்பதாகவும்” கிடைத்திருக்கும் கண்டெண்ட்டை வச்சு செய்து வருகிறார்கள்.

அதுவும் அம்மன் கோயில்களில் விழா நாட்களில் அதிகாலை முதலே ஒலிக்கும் எல்லாவிதமான அம்மன் பாடல்களும், இந்த அம்மாவுக்காக எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், “பெண் சாமியார் அன்னபூரணி அம்மாவுக்கு மொத்தம் 3 கணவர் என்றும், அதில் 2 வது கணவர் சிலையை உடைத்த 3 வது கணவர்” என்றும், செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதாவது, அன்னபூரணி 2 வது திருமணம் செய்து கொண்டதாக, “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். 

இதில், லட்சுமி என்ற பெண்ணின் கணவர் அரசு என்பவரை அன்னபூரணி தன் பக்கம் வலைத்துப்போட்டுக்கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

அதன் தொடர்ச்சியாக, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ஆனால், இவர்கள் இருவரும் இயற்கை ஒலி (ளி) என்ற பெயரில் சென்னையில் மாந்திரீக அமைப்பு ஒன்றை நடத்தி வந்து உள்ளனர். 

இதில் தான், மக்களின் நோய்களை குணப்படுத்துவதாக கூறி, அன்னபூரணி மற்றும் அரசு ஆகிய இருவரும் மக்களை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், கடந்த சில வருடங்களுக்கு முன்பு 2 வது கணவன் அரசு, மிகவும் மர்மமான முறையில் பலியாகி விட்டதாகவும்  கூறப்படுகிறது. ஆனால், இவர் எப்படி மரணம் அடைந்தார் என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், “உயிரிழந்த தனது கணவன், தன்னுடன் ஒளியாக கலந்து விட்டதாக” அன்னபூரணி தனது பேட்டிகளில் கூறி வருகிறார்.

இவை தவிர, 2 வது கணவர் அரசு எப்படி உயிரிழந்தார் என்பதை, இப்போது வரை அவர் விளக்கமாக சொல்லவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

இந்த நிலையில் தான், தனது  3 வதாக ரோஹித் என்பவரை அன்னபூரணி  திருமணம் செய்து கொண்டு, தற்போது வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக இல்லை என்கிற செய்திகளும் உலா வருகின்றன.

இந்த நிலையில் தான், சென்னை மதுராந்தகம் அருகே அன்னபூரணி தனது 2 வது கணவருக்கு என்று 50 சென்ட் நிலம் வாங்கி, அங்கு அவருக்கு சிலை வைத்து உள்ளதாகவும், அங்கு தினமும் அன்னபூரணி வழிபாடும் நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த வழிபாட்டிற்கு பின்பு தான், அன்னபூரணி அம்மையார் ஆதி பராசக்தியின் அவதாரம் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், அன்னபூரணியின் 3 வது கணவர் ரோஹித், அந்த 2 வது கணவரான அரசின் சிலையை தற்போது உடைத்து அதனை அப்புறப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் எந்த தகவலும் கூறப்படவில்லை.

ஆனால், அதே நேரத்தில் தனது 3 வது கணவர் ரோஹித் உடனும் அன்னபூரணி தற்போது வாழவில்லை என்றும், ஆனால் 4 வதாக ஒரு நபருடன் தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

இதன் காரணமாக, பெண் சாமியார் அன்னபூரணி மீது கூடிய விரைவில் போலீஸ் நடவடிக்கையும் பாயும் என்றும், தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.