நள்ளிரவில் காதலியை தேடிவந்த பள்ளி மாணவன்,மாணவியை  காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதாகவும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார்.

school love

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபு என்பவரின் மகள் இவர் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் காரியாபட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது பேரனுக்கும் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது. மாணவனும், மாணவியும் காதலித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மாணவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது பள்ளிக் காதலியை தேடி அவரது சொந்த ஊரான அக்கரைவட்டம் கிராமத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக மாணவன் தன் காதலி  வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் யார் என்ன என விசாரித்துள்ளனர். இதில் தான் மாணவி கவிதாவை காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதாகவும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவில் மாணவண் மற்றும் மாணவி இருவருக்கும் கல்யாணம் வேட்டி, சேலை உடை அணிந்து அங்கு உள்ள கோவிலில் அப்பகுதியினர் இருவருக்கும் சிலர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கரைவட்டம் கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவனின் வீட்டார்கள் வருவதற்குள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று மணக்கோலத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாணவனின் தந்தை தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார் மணக்கோலத்தில் இருந்த மாணவன் மற்றும் மாணவி மற்றும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த அக்கரைவட்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த கோபு, ராஜா, ராமன் அய்யாவு பேயன், நாடிமுத்து ஆகியோர் மீது குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் வழக்குப்பதி கைது செய்தனர். மேலும் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்த உள்ளூர்காரர்கள் பெயர்கள் அடிபடுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்  மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரின் பள்ளியில் படிக்கும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது தவறு என்பதால் அதற்கு காரணமான ஏழு பேரை கைது செய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது எனத் தெரிவித்தனர்.